செவ்வாய், 21 மார்ச் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified வெள்ளி, 20 ஜனவரி 2023 (22:53 IST)

திருமணத்தில் நடனமாட மறுத்த சிறுமிகளை எரித்த இளைஞர்கள் கைது

Fire
பீகார் மாநிலம் வைசாலி மாவட்டம் பகுரா கிராமத்தில் ஒரு திருமணவிழாவில் நடனம் ஆடன மறுத்த சிறுமியை தீ வைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஸ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.

இந்த மாநிலத்தின் வைசாலி என்ற மாவட்டம் பகுரா கிராமத்தில் ஒரு திருமணா விழா நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்கள், சிறுமியக்ள் உள்ளிட்ட பலரும்  நடனம் ஆடினர்.

அப்போது, சில இளைஞர்கள் தங்களுடன் நடனமாட சிறுமிகளையும், பெண்களையும் கட்டாயப்படுத்தினர்.

அதற்கு, சிறுமிகள் நடனமாட மறுத்தனர். இதில், ஆத்திரம் அடைந்த  இளைஞர்கள் சிறுமிகள் மீது தீ வைத்தனர்.

அங்கிருந்த மக்கள் சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது, சிறுமிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக பிரசாந்த்குமார், பிரதீக்குமார், ஆகிய இரண்டு வாலிபர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.