ஞாயிறு, 30 மார்ச் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 30 மார்ச் 2025 (07:10 IST)

சென்னையில் இன்று இந்தியா-பிரேசில் கால்பந்து போட்டி: மெட்ரோவில் இலவச பயணம்..!

football
சென்னையில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கும் இந்தியா-பிரேசில் அணிகள் இடையேயான கால்பந்து போட்டியை காண, மெட்ரோவில் இலவசமாகப் பயணிக்க வாய்ப்பு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதை உறுதிப்படுத்திய அந்த நிறுவனம் நேற்று வெளியிட்ட செய்தியில், கால்பந்து போட்டியை நேரில் காண விரும்பும் ரசிகர்கள் எந்த ஒரு மெட்ரோ நிலையத்திலிருந்தும் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்துக்குச் செல்ல இருபுறமும் இலவசமாக பயணிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
 
மேலும், போட்டிக்கான நுழைவுச் சீட்டில் உள்ள தனித்துவமான 'க்யூஆர்' குறியீட்டை தானியங்கி நுழைவு யந்திரத்தில் ஸ்கேன் செய்தால், ரசிகர்கள் மெட்ரோ ரயில்களில் பயணிக்கலாம் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva