1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 7 ஜனவரி 2023 (21:08 IST)

3வது டி-20; இந்திய அணி அபாரம்....இலங்கைக்கு 229 ரன்கள் வெற்றி இலக்கு!

india-srilanka
இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு தலைவராக சேத்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் நடந்த டி-20 உலகக் கோப்பையில், இங்கிலாந்திடம் தோற்றதால், முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் கடும் விமர்சனங்கள் எழுப்பினர்.

இதையடுத்து, சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வுக் குழு கலைக்கப்பட்டது.

பின்னர், பிசிசிஐ, புதிய தேர்வுக் குழுவை தேர்வு செய்ய நடவடிக்கைகள் மேற்கொண்டது.

இதற்காக, அசோக் மல்கோத்ரா, ஜக்னி பரண்ஜோ, சுலக்சனா ஆகிய  3 பேர் கொண்ட குழுவையும் நியமித்திருந்தது. இந்தக் குழு அளிந்த பரிந்துரையின் பேரில் சேத்தன் குமாரை மீண்டும் தேர்வுக் குழுவின் தலைராக நியமித்துள்ளது பிசிசிஐ.

இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் செய்து விளையாடி வரும் இலங்கை அணி டி-20 போட்டியில் விளையாடி வருகிறது.

இன்றைய  மூன்றாவது போட்டியில் ஹர்த்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது.

இதில், இஷான் கிஷான்  1 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்தார்.

கில் 46 ரன்களும், திரிப்பதி 35 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 112 ரன்களும், பாண்ட்யா 4 ரன்களும் அடித்தனர். எனவே, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்கள் அடித்து, 229 ரன்கள் இலங்கைக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.