ஞாயிறு, 29 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 20 டிசம்பர் 2022 (21:03 IST)

தி கிரேட் இந்தியன் கிச்சன்' - ரிலீஸ் தேதி அறிவிப்பு!

the great indian kitchen
ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த தி கிரேட் இந்தியன் கிச்சன்' படத்தின் ரிலீஸ் தேதி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இயக்குனர் ஆர் கண்ணன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த தி கிரேட் இந்தியன் கிச்சன்'   என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது என்பதும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று செய்தி வெளியானது என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் டிசம்பர் 29 ஆம் தேதி தி கிரேட் இந்தியன் கிச்சன்'   என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
கடந்த 2021ஆம் ஆண்டு நிமிஷா விஜயன் நடிப்பில் மலையாளத்தில் உருவான தி கிரேட் இந்தியன் கிச்சன்'   திரைப்படம் அதே பெயரில் தற்போது தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது என்பதும் தமிழிலும் இந்த படம் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
Edited by Mahendran