அச்சுறுத்தும் கொரனா; கேரளாவில் 3 ஆவதாக ஒருவருக்கு பாதிப்பு
கொரனா ஆட்கொல்லி வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில் கேரளாவில் 3 ஆவதாக ஒருவருக்கு கொரனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரனா வைரஸால் இது வரை சீனாவில் 361 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இந்தியா, இலங்கை, தாய்லாந்து, தைவான், தென் கொரியா, அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த வைரஸ் பரவியுள்ளது.
இதனிடையே இந்தியாவில் முன்னதாக கேரள மாநிலத்தில் இருவர் கொரனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதே மாநிலத்தில் 3 ஆவதாக ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். இவர் காசர்கோடு பகுதியை சேர்ந்தவர் என அறியப்படுகிறது. இதனை அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா உறுதிப்படுத்தியுள்ளார்.