புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 3 பிப்ரவரி 2020 (11:00 IST)

கேரளா ரவுடியை சுட்டுக் கொன்ற மர்ம கும்பல்! – மங்களூரில் பரபரப்பு!

கேரளாவை சேர்ந்த பிரபல ரவுடியை மர்ம கும்பல் கடத்தி சென்று சுட்டுக் கொன்ற சம்பவம் மங்களூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் காசர்கோடு பகுதியை சேர்ந்த ரவுடி “டான்” தஸ்லின். இவர் மீது கேரள காவல் நிலையங்களில் கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. சமீபத்தில் ஆர்.எஸ்.எஸ் தலைவர்களை கொல்ல முயன்றதாக கைது செய்யப்பட்ட தஸ்லின் ஜாமீனில் வெளிவந்து மங்களூர் சென்றுள்ளார்.

அங்கு சிலருடன் கூட்டு வைத்துக்கொண்டு வங்கி கொள்ளையில் ஈடுபட்ட தஸ்லின் மீண்டும் போலீஸில் பிடிபட்டார். சிறையில் அடைக்கப்பட்ட அவர் மீண்டும் ஜாமீனில் வெளிவந்துள்ளார். பிறகு மங்களூரிலிருந்து கேரளாவுக்கு தனது சகோதரருடன் காரில் சென்று கொண்டிருந்தவரை மர்ம கும்பல் வழிமறித்து கடத்தி சென்றுள்ளது.

இதுகுறித்து அவரது சகோதரர் அளித்த புகாரின் பேரில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீஸார் தஸ்லினை சடலமாக மீட்டுள்ளனர். மங்களூரு பி.சி ரோடு பகுதியில் காருக்குள் வைத்து தஸ்லினை சுட்டுக் கொன்றுவிட்டு சென்றிருக்கிறது அந்த மர்ம கும்பல். ’டான்’ தஸ்லினுக்கு பல்வேறு குற்ற சம்பவங்களில் எதிரிகள் உண்டு என்பதால் அவர்களில் யாராவது இதை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. கேரள ரவுடு மங்களூரில் வைத்து கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.