திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 13 மார்ச் 2020 (10:07 IST)

ஜோதிராதித்ய சிந்தியா மீதான வழக்கை தூசு தட்டும் காங்கிரஸ் அரசு

மத்திய பிரதேச மாநிலத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து கொண்டிருந்த நிலையில் திடீரென அக்கட்சியிலிருந்து ஜோதிராதித்யா சிந்தியா தனது ஆதரவாளர்களுடன் விலகினார். இதனையடுத்து தற்போது மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி ஆட்டம் கண்டு வருகிறது
 
ஜோதிராதித்யா சிந்தியாவின் ஆதரவாளர்கள் 22 எம்.எல்.ஏக்கள் திடீரென ராஜினாமா செய்ததால் மத்திய பிரதேச அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த சில கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவில் இணைந்தார். இதனை அடுத்து அவர் பாஜகவின் ராஜ்யசபா எம்பி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ஜோதிராதித்யா சிந்தியா மீது கடந்த 2014ஆம் ஆண்டு மகாராஷ்டிரா அரசு ஒரு வழக்கு போட்டது. இந்த வழக்கு கடந்த ஆறு ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட நிலையில் தற்போது அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியுடன் இணைந்து கொண்டதை அடுத்து அந்த வழக்கு தற்போது மீண்டும் தூசி தட்டப்பட்டு இருக்கிறது 
 
ஜோதிராதித்யா சிந்தியா மீதான வழக்கை மீண்டும் விசாரிக்க மகாராஷ்ட்ரா அரசு தொடங்கி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது ஒரு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என ஜோதிராதித்ய சிந்தியா தரப்பில் இருந்து கூறப்பட்டாலும் காங்கிரஸ், இந்த வழக்கை மிக தீவிரமாக நடத்தி ஜோதிராதித்யா சிந்தியாவை குற்றவாளி ஆக்கும் முயற்சியில் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன