1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Updated : புதன், 11 மார்ச் 2020 (16:23 IST)

பிரதமர் மோடியின் அர்ப்பணிப்பு, கொள்கைகளைக் கண்டு வியக்கிறேன் - ஜோதிராதித்ய சிந்தியா

பிரதமர் மோடியின் அர்ப்பணிப்பு, கொள்கைகளைக் கண்டு வியக்கிறேன் - ஜோதிராதித்ய சிந்தியா

பிரதமர் மோடியின் அர்பணிப்பு, கொள்கைகளைக் கண்டு வியக்கிறேன் என பாஜகவில் இணைந்த ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.
 
மத்திய பிரதேச மாநிலத்தில் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து கொண்டிருந்த நிலையில் அந்த ஆட்சியை கலைக்க கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பாஜக தீவிரமாக முயற்சி செய்தது. ஆனால் அம்முயற்சி பலனளிக்கவில்லை. இந்நிலையில், பாஜக குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க முயல்வதாக காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.
 
காங்கிரஸ் தனது உட்கட்சி விவகாரம் காரணமாக தற்போது ஆட்சியை இழக்கும் நிலையில் உள்ளது. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 17 பேர் திடீரென மாயமாகி உள்ளனர் என்றும், அவர்கள் ஜோதிராதித்யா சிந்தியா தலைமையில் பெங்களூரில் தங்கி இருக்கலாம் என்றும் சிந்தியாவை முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்து வருவதாக கூறப்படுகிறது.
 
நள்ளிரவில் சில நாட்களுகு முன், அமித்ஷா நடத்திய மீட்டிங்:நள்ளிரவில் அமித்ஷா நடத்திய மீட்டிங்:இந்த நிலையில் மத்திய பிரதேச விவகாரம் குறித்து ஆலோசனை செய்ய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று நள்ளிரவில் திடீரென ஒரு மீட்டிங் ஏற்பாடு செய்துள்ளார். இதில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்பட பலர் கலந்து கொண்டனர் என்று கூறப்படுகிறது.
 
மத்திய பிரதேசத்தில் அதிருப்தி எம்எல்ஏக்கள் ஆக இருக்கும் சிந்தியா உள்பட 17 எம்எல்ஏக்களை பாஜக வளைக்க முயற்சி எடுக்கப்படும் என்றும் சிந்தியாவுக்கு முதல்வர் பதவி அல்லது ராஜ்யசபா எம்பி பதவி கொடுக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
சிந்தியாவுக்கு முக்கிய பொறுப்பு வழங்கி அவரை தங்கள் பக்கம் பாஜக இழுத்துவிட்டால் மத்திய பிரதேசத்தில் ஆட்சி மாறும் என்று கூறப்பட்ட நிலையில் இன்று , பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் ஜோதிராதித்ய சிந்தியா.
 
ஏற்கனவே 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற போது ஜோதிராதித்ய சிந்தியா முதல்வர் பதவியை பெற முயன்றார். ஆனால் கமல்நாத்துக்கு முதல்வர் பதவி வழங்கப்பட்டது. அதிலிலிருந்து ஜோதிராதித்யா காங்கிரஸ் கட்சியுடன்  அவருக்கு மனஸ்தாபம் இருந்துள்ளதாகத் தெரிகிறது. 
 
மேலும் , பாஜக கட்சியை வளர்த்தெடுத்தவர்களில் ஜோதிராதித்ய சிந்தியாவின் பாட்டி விஜய ராஜே சிந்தியா முக்கியமானவர் ஆவார், அவரது மகள் தான் வசுந்தரா ராஜே என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இதுகுறித்து ஜோதிராதிய சிந்தியா கூறியுள்ளதாவது :
 
காங்கிரஸ் கட்சி முன்பு இருந்ததைப் போன்று இப்போது இல்லை; இளம் தலைவர்கள் பலர் இங்கு புறக்கணிகப்படுகிறார்கள். பிரதமர் மோடியின் அர்பணிப்பு, கொள்கைகளைக் கண்டு வியக்கிறேன் என தெரிவித்துள்ளார்.