வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 10 மார்ச் 2020 (15:11 IST)

ஆட்சியை இழக்கும் காங்கிரஸ்? கைப்பற்ற காத்திருக்கும் பாஜக!

மத்தியபிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி ஆட்டம் கண்டுள்ள நிலையில் ஆட்சியை இழக்கும் சூழலும் உருவாகியுள்ளது. 
 
மத்திய பிரதேச மாநிலத்தில் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து கொண்டிருந்த நிலையில் காங்கிரஸ் தனது உட்கட்சி விவகாரம் காரணமாக தற்போது ஆட்சியை இழக்கும் நிலையில் உள்ளது.  
 
காங்கிரஸின் முக்கிய தலைவரான ஜோதிராதித்யா சிந்தியாவும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் சிலரும் காங்கிரஸ் மீது அதிருப்தியில் இருந்து வந்துள்ளனர்.  இந்த சம்பவம் கடந்த வாரம் பூதாகரமாக வெடித்த நிலையில், இன்று ஜோதிராதித்யா சிந்தியா மோடியை சந்தித்து பேசினார். இதன் பின்னர் தற்போது அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியுள்ளார்.   
 
இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 19 பேர் ராஜினாமா செய்துள்ளனர். ராஜினாமா செய்த 19 பேரும் ஜோதிராதித்யா சிந்தியாவின் ஆதரவாளர்கள் என தெரிகிறது.  இதனால் மத்தியபிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி ஆட்டம் கண்டுள்ளது. 
 
ஆம், மத்திய பிரதேசத்தில் தற்போதைய நிலவரப்படி மொத்தம் உள்ள 230 இடங்களில் 2 இடங்கள் காலியாக உள்ளன. அதனால் பெரும்பான்மையை நிறுபிக்க 115 எம்.எல்.ஏக்கள் போதும். தற்போது காங்கிரஸில் இருந்து 19 பேர் ராஜினாமா செய்துள்ளது பாஜகவிற்கு பெரும்பான்மை கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.