புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: செவ்வாய், 10 டிசம்பர் 2019 (16:35 IST)

”கைலாசா” நாட்டின் சிட்டிசன்ஷிப் கேட்கும் 12 லட்சம் பேர்..

நித்யானந்தாவின் ”கைலாசா” நாட்டு குடியுரிமைக்கு 12 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக நித்தியானந்தா தெரிவித்துள்ளார்.

நித்யானந்தா மீது கடத்தல் வழக்கு, பாலியல் வழக்கு போன்ற பல வழக்குகள் பதிவுசெய்யப்பட்ட நிலையில் அவர் திடீரென தலைமறைவானார். இதன் பிறகு நித்யானந்தா ஈகுவாட்டரில் ஒரு தீவை விலைக்கு வாங்கி ”கைலாசா” என பெயரிட்டு தனி நாடாக அறிவிக்கவுள்ளதாக தகவல் வெளியானது.

மேலும் நித்யானந்தா எங்கு இருக்கிறார்? என்று போலீஸார் அவரை தேடும் முயற்சியில் உள்ளனர். எனினும் நித்யானந்தா தினமும் தனது வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அவர் வெளியிட்ட வீடியோவில் ”கைலாசா தனி நாடு அறிவித்த பின்னர் தினமும் அதனை வரவேற்று பல லட்சம் பேர் மின்னஞ்சல் அனுப்பி வருகின்றனர், மேலும் இதுவரை 12 லட்சம் பேர் குடியுரிமைக்கு விண்ணப்பித்துள்ளனர்” என கூறியுள்ளார்.

இதனிடையே நித்யானந்தாவின் முன்னாள் சீடரான லெனின் கருப்பன் தொடர்ந்த வழக்கில் வருகிற 12 ஆம் தேதிக்குள் நித்யானந்தாவை போலீஸார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.