புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 10 டிசம்பர் 2019 (11:58 IST)

நித்யானந்தா மாதிரி தீவு வாங்கி முக ஸ்டாலின் முதல்வராகலாம்: ஜெயகுமார்

பாலியல் வழக்கு ஒன்றில் நித்தியானந்தாவை விசாரிக்க போலீசார் முடிவு செய்த நிலையில் திடீரென அவர் தலைமறைவாகி உள்ளார் என்பதும் அவர் வெளிநாட்டுக்கு தப்பி சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்படுகின்றது என்பதும் அனைவரும் அறிந்ததே
 
இந்த நிலையில் நித்தியானந்தா திடீரென கைலாஷ் என்ற நாட்டை உருவாக்கி இருப்பதாகவும் அந்த நாட்டில் குடியுரிமை பெற விரும்புபவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவித்தார்
 
இந்த கைலாஷ் நாடு ஈகுவடார் நாட்டில் உள்ள ஒரு தீவை சேர்ந்தது என்றும் அந்த தீவை நித்தியானந்தா விலைக்கு வாங்கி விட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் ஈக்வடார் தூதரகம் மற்றும் ஈகுவடார் அரசு இதனை மறுத்துள்ளது என்பதும் நித்தியானந்தாவுக்கு அடைக்கலம் தரவும் ஈக்வடார் அரசு மறுத்து விட்டதாகவும் அறிவிக்கப்பட்டது 
 
இந்த நிலையில் கடந்த பல ஆண்டுகளாக தமிழகத்தின் முதல்வராக முக ஸ்டாலின் ஆவார் என்று அக்கட்சியினர் தெரிவித்துவரும் நிலையில், இது குறித்து கருத்து கூறிய அமைச்சர் ஜெயக்குமார் ’நித்தியானந்தா மாதிரி ஒரு தீவை விலைக்கு வாங்கி அந்த தீவுக்கு தன்னைத்தானே முதல்வராக முகஸ்டாலின் அறிவித்துக் கொள்ளலாம். அப்படியாவது அவர் முதல்வரானால் தான் உண்டு’ என்று கிண்டலாக கூறியிருப்பது திமுகவினர் களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது