1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: செவ்வாய், 10 டிசம்பர் 2019 (08:59 IST)

கல்வி கடன்கள் ரத்து செய்யப்படுவது உண்மையா? நிதியமைச்சர் விளக்கம்

பொருளாதார மந்தநிலை காரணமாக கல்வி கடன் ரத்து செய்யப்படுமா? என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.

மொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்த 6 மாதங்களில் கடும் சரிவை கண்டுள்ளது. இதனால் பொருளாதாரத்தில் மந்தநிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பொருளாதார மந்தநிலை காரணமாக வேலையின்மை 7.5 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாக சி.எம்.ஐ.இ. என்ற இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது.

இதனால் மத்திய அரசு கல்வி கடன்களை ரத்து செய்யப்போவதாக செய்திகள் பரவின. இந்நிலையில் இதற்கு மக்களவையில் விளக்கம் அளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,” 2017 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு மார்ச் வரை நிலுவையிலுள்ள கல்விக் கடன்களின் மொத்த மதிப்பு மிகவும் அதிகரித்துள்ளது. கல்வி கடன்களை வசூலிக்க வங்கிகள் சரியான அணுகுமுறையை கையாளவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. எனினும் கல்வி கடன்களை ரத்து செய்யும் திட்டம் எதுவும் இல்லை” என அவர் கூறியுள்ளார்.