வெள்ளி, 27 பிப்ரவரி 2026
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By BALA
Last Modified: வியாழன், 26 பிப்ரவரி 2026 (12:38 IST)

டைம் லூப் பாணியில் காதல் கதை! ஹைப்பை கிளப்பிய ‘காதல் ரிசெட் ரிபீட் ’ படத்தின் டிரெய்லர்

டைம் லூப் பாணியில் காதல் கதை! ஹைப்பை கிளப்பிய  ‘காதல் ரிசெட் ரிபீட் ’ படத்தின் டிரெய்லர்
இயக்குனர் விஜய் இயக்கத்தில் காதல் ரீசெட் ரிபீட் என்ற பெயரில் ஒரு திரைப்படம் உருவாகி இருக்கிறது. ஒரு புதுமையான ரொமான்டிக் பேண்டஸி திரைப்படமாக இது தயாராகி இருக்கிறது. படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பொதுவாக காதலில் தவறு நடந்தால் பிரிந்து விடுவார்கள். ஆனால் அந்தத் தவறை சரி செய்ய மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் எப்படி இருக்கும்.
 
அப்படிப்பட்ட ஒரு விஷயத்தை கருவாக வைத்து தான் இந்த படம் உருவாகி இருக்கிறது. ஆம், டைம் லூப் பாணியில் இந்த படம் தயாராகி இருக்கிறது. இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தன்னுடைய கலர்ஃபுல்லான துள்ளலான பின்னணி இசையால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் ஹரிஷ் ஜெயராஜ்.
 
இது இளைஞர்களை கவரும் வகையில் ஜாலியாகவும் அதே சமயம் மிகவும் உணர்ச்சிகரமாகவும் இருக்கும் என படத்தின் டிரைலரை பார்க்கும்பொழுது தெரிகிறது. தமிழ் சினிமாவை பொறுத்த வரைக்கும் மாநாடு திரைப்படத்திற்கு பிறகு டைம் லூப் பாணியில் படங்கள் வரிசையாக வரத் தொடங்கி இருக்கின்றன. அது ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.
 
அதே மாதிரியான ஒரு பாணியை முழு நீள காதல் கதையாக இந்த படத்தை இயக்குனர் விஜய் உருவாக்கி இருக்கிறார். இது மார்ச் 6ஆம் தேதி உலகெங்கிலும் இந்த படம் ரிலீஸ் ஆக இருக்கின்றன. டி ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் மதுமுகேஷ் ,ஜியோ சங்கர், மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரமான அர்ஜுன் அசோகன், எம் எஸ் பாஸ்கர், ஜெயப்பிரகாஷ், விஜி சந்திரசேகர் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.