அடுத்த ஒரு லவ் ஸ்டோரி! 96, ஆட்டோகிராப் லிஸ்ட்டில் இணையும் ‘வித்லவ்’.. படம் எப்படி இருக்கு?
இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் வித் லவ். இந்த படம் பிப்ரவரி 6ம் தேதி தியேட்டர்களில் வெளியாக இருக்கின்றது .இந்த படத்திற்கான premier ஷோ நேற்று திரையிடப்பட்டது. இந்த பிரிமியர் ஷோவுக்கு பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். குறிப்பாக ரஜினிகாந்த் அவருடைய மனைவி லதா ரஜினிகாந்த், ஸ்ருதிஹாசன் ,சசிகுமார் சமுத்திரக்கனி என பல திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த படத்தை ரஜினிகாந்தின் இளைய மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரித்துள்ளார். படம் குறித்து பல விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இதைப்பற்றி வலை பேச்சில் இன்று அவர்களுடைய விமர்சனத்தை தெரிவித்துள்ளனர். அதாவது 96, ஆட்டோகிராப் போன்ற திரைப்படங்கள் காதல் திரைப்படங்களை சார்ந்து ஒரு பெஞ்ச் மார்க்கை தமிழ் சினிமாவில் கிரியேட் செய்திருக்கின்றன. இப்போது அந்த லிஸ்டில் வித் லவ் திரைப்படமும் இணைந்துள்ளதாக தெரிவித்திருக்கின்றனர். மேலும் ஆட்டோகிராப் திரைப்படத்தை பார்த்துவிட்டு பல பேர் அவரவர் முன்னாள் காதலர் காதலியை நோக்கி படையெடுத்த கதை எல்லாம் நமக்கு தெரியும். அதைப்போல வித் லவ் திரைப்படத்தையும் பார்த்து பல பேர் அவரவர் காதலி காதலனை நோக்கி படை எடுக்க ஆரம்பித்து விடுவார்கள்.
குறிப்பாக பள்ளி பருவ காதலை மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருக்கிறது. படத்தின் கதைப்படி ஹீரோவுக்கு பெண்பார்க்கும் படலம் நடக்கிறது. அங்கு போன இடத்தில் அந்த பெண்ணை பார்த்து ஹீரோ பேசுவார். இருவரும் தனியாக அவரவர் அனுபவங்களை பற்றி பேச ஆரம்பிக்கும் பொழுது பள்ளி பருவ கதைகளை எல்லாம் பற்றி பகிர்ந்து கொள்வார்கள். கடைசியில் ஒரே பள்ளியில் தான் இருவரும் படித்திருப்பார்கள். அப்படியே அந்தக் கதைகளை சொல்ல ஹீரோவுக்கு ஒரு ஃபிளாஷ்பேக் இருக்கிறது. ஹீரோயினுக்கும் ஒரு பிளாஷ் பேக் இருக்கிறது. எல்லாம் சுற்றி ஒரே புள்ளியில் தான் முடியும்.
அதன் பின்னணியில் என்ன நடக்கிறது என்பதுதான் இந்த படத்தின் கதை. இந்த படத்தின் இயக்குனர் மதன் இவர் ஒரு புதுமுக இயக்குனர். ஆனால் படத்தை பார்க்கும் பொழுது இவர் புது முக இயக்குனர் என்று சொல்ல முடியாது .நேர்த்தியான திரை கதையில் அந்த படத்தை அவ்வளவு அழகாக செய்துள்ளார். பள்ளிக்கூட காலத்தில் நடந்ததை மிகவும் யதார்த்தமாக இந்த கதையில் காட்டியுள்ளார். படத்தின் கதாநாயகன் அனஸ்வர ராஜன். இதுவரை இப்படி ஒரு கதாநாயகியை பார்த்ததே இல்லை .அவ்வளவு அழகாக இருக்கிறார். மிகவும் யதார்த்தமான நடிப்பை அழகாக கொடுத்திருக்கிறார். அதுவும் இரண்டு மாதிரியான நடிப்பு சமகாலத்தில் ஒன்று பள்ளி பருவத்தில் ஒன்று என வேறுபடுத்தி அழகாக நடித்திருக்கிறார்.
இந்த படத்தில் இருக்கும் காட்சிகள் ஏதோ ஒரு வகையில் நம்மோடு கனெக்ட் ஆகுற மாதிரியே இருக்கிறது. படத்தில் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரமுமே சில வருடங்கள் நம் ஞாபகத்தில் அப்படியே தங்கி இருப்பார்கள். டெக்னிக்கலாக பேச வேண்டும் என்றால் இந்த படத்தின் இசை அமைப்பாளர் ஷான் ரோல்டன். இந்த மாதிரியான ஒரு ஃபீல் குட் படத்தை இன்னும் பெரிய அளவில் மேலே தூக்குவதற்கு என்று பிறந்து வந்தவர் போல தன்னுடைய இசையில் காட்டி இருக்கிறார். படத்தின் முதல் பாதியில் உரையாடல்கள் போய்க்கொண்டே இருக்கும். ஹீரோவும் ஹீரோயினும் பேசுவது மாதிரி.
அதனால் அவர்கள் பேசும் எந்த இடத்திலும் படம் பார்ப்பவர்களுக்கு ஒரு சோர்வு வந்து விடக்கூடாது என்பதற்காக இவர் பின்னணியில் அதற்கேற்ற வகையில் இசையை போட்டுக் கொண்டே இருப்பார். அதுதான் இந்த படத்திற்கு மிகப்பெரிய பில்லர் ஆக அமைந்துள்ளது. கிளைமாக்ஸுக்கு முன்னாடி ஒரு பாடல் வருகிறது. அது அற்புதமாக வந்திருக்கிறது. அதுதான் இந்த வருடத்தின் ட்ரெண்டிங் ஆன பாடலாகவும் இருக்கும். படத்தின் எடிட்டிங் பற்றி பேச வேண்டும் என்றால் ஷார்ப்பான எடிட்டிங் ஆக வந்திருக்கிறது. இன்று சினிமாவின் திரை கதையே மாறி இருக்கிறது என்பதற்கு உதாரணமாக இந்த படத்தை சொல்லலாம்.
படத்தின் டைட்டிலுக்கு ஏற்ப இந்த படத்தில் வருகிற எல்லா கதாபாத்திரங்களும் எல்லோருக்கும் உதவி செய்கிறார்கள் யாரும் யாரையும் விட்டுக் கொடுப்பதில்லை அனைவரிடமும் அன்பு காட்டுகிறார்கள். சமீபகாலமாக வெளியான சிறை படமாகட்டும் ,டூரிஸ்ட் ஃபேமிலி படமாகட்டும், அயோத்தி போன்ற படங்களாகட்டும். மக்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பை பெற்று வருகின்றன. அந்த வரிசையில் இந்த படமும் சேர வேண்டும் என்பதுதான் நம்முடைய ஆசை என இந்த படத்தை பற்றி பாசிட்டிவான விமர்சனத்தை வலை பேச்சில் என்று கூறி இருக்கிறார்கள் .