ஞாயிறு, 15 பிப்ரவரி 2026
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By Bala
Last Modified: புதன், 4 பிப்ரவரி 2026 (10:50 IST)

வித் லவ் படத்தின் விமர்சனம்: ஒரு வார்த்தையில் சொன்ன ரஜினி

வித் லவ் படத்தின்  விமர்சனம்: ஒரு வார்த்தையில் சொன்ன ரஜினி
கடந்த ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் டூரிஸ்ட் பேமிலி படத்தினை  இயக்கிய அபிஷன் ஜீவிந்த் அடுத்து நாயகனாக  வித் லவ் படம் மூலம் நாயகனாக அறிமுகம் ஆகிறார்.  இவரிடம்  இணை இயக்குனராக பணியாற்றிய மதன் இப்படத்தினை இயக்கியுள்ளார். ஷான் ரோல்டன் இசையமைக்கும் இப்படத்தினை சௌந்தர்யா ரஜினிகாந்த் மகேஷ் ராஜ்  ஆகிய இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். சமீபத்தில் வெளியான  இப்படத்தின் ட்ரைலர் நல்ல வரவேற்பை பெற்றது. 
 
 நாளை மறு நாள் வெளியாக உள்ள வித் லவ் படத்தின் சிறப்பு காட்சி நேற்று சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இதில் நடிகர் ரஜினிகாந்த் வருகை தந்தார். அவ்ருடன் 
ஸ்ருதிஹாசன், அனிருத், சசிகுமார் என பலர்பங்கேற்றனர். படம் பார்த்த பின்  செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், Very Nice என்று கூறினார்.