நான் படியேறி மேல வந்தவன் இல்ல, எதிரிகளை மிதிச்சு மேல வந்தவன்: பத்து தல டீசர்.,.!

வெள்ளி, 3 மார்ச் 2023 (17:46 IST)
சிம்பு நடித்த பத்துதல என்ற திரைப்படம் வரும் மார்ச் 30ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டீசர் சற்று முன் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் ஆகியோர்களின் அட்டகாசமான ஆக்சன் காட்சிகள் இந்த டீசரில் இடம் பெற்றுள்ளது. குறிப்பாக சிம்பு ’நான் படியேறி மேல வந்தவன் இல்ல, எதிரிகளை மிதிச்சு மேல வந்தவன், என்னால எத்தனை பேர் செத்தான்னும் தெரியாது எத்தனை பேரு வாழ்ந்தான்னும் தெரியாது’ என்ற வசனம் ரசிகர்களை ஆச்சரியமடைய செய்துள்ளது. 
 
சிம்பு இந்த படத்தில் ஒரு மண் கடத்தல் மாஃபியா கூட்டத்தைச் சேர்ந்தவராக நடித்துள்ளார் என்பது டீசரையிலிருந்து பெரியவருகிறது. 
 
இசையமைப்பாளர் ஏஆர் ரகுமானின் பின்னணி இசை பட்டையை கிளப்பும் வகையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மொத்தத்தில் இந்த டீசர் சிம்பு ரசிகர்களை மட்டுமின்றி அனைத்து தரப்பு ரசிகர்களையும் திருப்தி செய்யும் என்பதில் சந்தேகம் இல்லை.
 
Edited by Siva

எல்லாம் காட்டு

காத்து வாங்கும் பாலன்!.. மஞ்சுமெல் பாய்ஸ் டைரக்டரின் புது படம் இப்படி ஆகிப்போச்சே!..

முதல்வர் விஜய் பிறந்த நாள்!.. ஏமாந்து போன தளபதி ஃபேன்ஸ்!...

திரையரங்கை அடுத்து ஓடிடியில் பிளாஸ்ட்பண்ண வரும் அர்ஜுன்

நான் நடிச்ச ஒரு படம் இந்த அளவுக்கு!... கண்ணீரோடு நன்றி சொன்ன நூறு சாமி நாயகி!..

பாக்ஸ் ஆபீஸில் சமந்தாவின் வேட்டை: மா இண்டி பங்காரம் 3 நாட்களில் ரூ.41.79 கோடி வசூல்

அடுத்த கட்டுரையில்
Show comments