1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. Simbus Pathu Thala teaser release tomorrow

சிம்புவின் ‘’பத்து தல’’ பட டீசர் நாளை ரிலீஸ்...ரசிகர்கள் மகிழ்ச்சி

pathu thala
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சிம்பு, கெளதம் கார்த்திக் நடிப்பில், உருவாகி வரும்  பத்து தல படத்தின் டீசர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சிம்பு மற்றும் கெளதம் கார்த்திக் நடிப்பில் உருவாகியுள்ள படம் பத்துதல. இப்படத்தை சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய  என்.கிருஷ்ணா இயக்கியுள்ளார்.

இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். இப்படத்தில் பிரியா பவானி சங்கர், கலையரசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான்  இசையமைக்கிறார்.

பத்து தல படம் கன்னட படமான கன்னா படத்தின் ரீமேக் ஆகும். ஏற்கனவே இப்படத்தின் முதல் சிங்கில் ‘நம்ம சத்தம்’ ரிலிஸாகி வைரலாது.

இந்த நிலையில், நாளை மாலை 5:31 மணிக்கு பத்து தல படத்தின் டீசர் வெளியாகும் என்று படக்குழு தற்போது அறிவித்துள்ளது. இதனால், சிம்பு ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும்,  இப்படம் வரும் மார்ச் 30 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
அட நம்ம பிந்து மாதவியா இது? மாடர்ன் லுக்கில் மனதை மயக்குறாங்களே!