பத்து தல படத்தில் நடிக்கிறாரா ஏ ஆர் ரஹ்மான்? லேட்டஸ்ட் தகவல்!
சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகி வரும் பத்து தல திரைப்படம் ஷூட்டிங் முடிந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.
கன்னடத்தில் ஹிட்டடித்த மப்டி படத்தை தமிழில் முதலில் அதே பெயரில் ரீமேக் செய்ய முடிவெடுத்தார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா. இந்த படத்தின் நாயகனாக கௌதம் கார்த்திக்கும், முக்கியமான ஒரு வேடத்தில் சிம்பு நடிக்கவும் ஒப்பந்தமாகி சில நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. ஆனால் அதன் பிறகு சிம்பு படப்பிடிப்பில் கலந்து கொள்ளாததால் நிறுத்தப்பட்டது.
இப்போது சில பல மாற்றங்களோடு பத்து தல என்ற பெயரோடு அந்த படம் மீண்டும் தொடங்கப்பட்டு படப்பிடிப்பு முழுவதும் நிறைவு பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மார்ச் மாதம் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் சமீபத்தில் ரிலீஸ் ஆனது. இந்நிலையில் மற்றொரு பாடலை ரஹ்மான் இசையில் அவரின் மகன் ஏ ஆர் ஆர் அமின் பாடியுள்ளார் என்று சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்தின் ப்ரமோஷன் வீடியோவில் ஏ ஆர் ரஹ்மான் தோன்றி நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.