இன்று ஒரே நாளில் ரூ.560 குறைந்தது தங்கம் விலை.. இன்னும் குறையுமா?

Written By Siva
Updated: புதன், 9 அக்டோபர் 2024 (10:26 IST)
தங்கம், வெள்ளி விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை ஒரு கிராமுக்கு 70 ரூபாயும் ஒரு சவரனுக்கு 560 ரூபாயும் குறைந்துள்ளது. இதனை அடுத்து இன்னும் குறைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரங்களை பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 70 ரூபாய் குறைந்து ரூபாய்   7,030 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 560 குறைந்து ரூபாய்  56,240 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,485  எனவும் ஒரு சவரன் ரூபாய் 59,880 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 100.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய்  100,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
Edited by Siva

எல்லாம் காட்டு

தர்மேந்திர பிரதான் பதவி பறிக்கப்படுமா?!... ஒன்றிய அரசு இன்று முடிவு!...

டாஸ்மாக்கில் கூடுதல் விலைக்கு விற்றால் வேலை காலி!.. 10 ஆயிரம் அபராதம்...

டெல்லியில் போராடும் மாணவர்கள்!. ரூ.67,734க்கு பீட்சா அனுப்பிய இளைஞர்!.. நெகிழ்ச்சி செய்தி!..

வீட்டின் முன்பு மாந்திரீக பூஜை!.. ஜிபி முத்து மீது தாக்குதல்!...

நாளை வரை அவகாசம் கேட்ட பாஜக!.. தர்மேந்திர பிரதான் பதவி பறிக்கப்படுமா?...

அடுத்த கட்டுரையில்
Show comments