Daily Horoscope

தொடர் வீழ்ச்சியில் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் இவ்வளவு சரிவா? சென்னை நிலவரம்..!

Written By Siva
Updated: திங்கள், 29 ஜூலை 2024 (09:48 IST)
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் சமீப காலமாக தங்கம் குறைந்து கொண்டே வருகிறது என்பதும் குறிப்பாக பட்ஜெட்டில் வரி குறைக்கப்பட்ட பின்னர் தங்கம் விலை மிக வேகமாக சரிந்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் சென்னையில் இன்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு 50 ரூபாயும், ஒரு சவரனுக்கு 400 ரூபாயும் குறைந்துள்ளதை அடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்று சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து ரூபாய்   6,415 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 400 குறைந்து  ரூபாய் 51,320 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.50,000ஐ என குறையும் என்று கூறப்படுகிறது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6,870 எனவும் ஒரு சவரன் ரூபாய் 54,960 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 89.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 89,500.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
Edited by Siva
 
 

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments