1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 29 ஜூலை 2024 (07:23 IST)

கோயில் கோபுரத்தில் இருந்து தவறி விழுந்தவர் பலி.. சென்னையில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் கோபுரத்தில் இருந்து தவறி விழுந்தவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கொட்டிவாக்கம் பகுதியை சேர்ந்த பழனி என்பவர், கோயில் கோபுரத்தில் ஏறி பணியாற்றி கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தார். இதனால் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு அவர் அழைத்து செல்லப்பட்டார். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் உயிரிழந்துவிட்டார் என்று கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

இந்த நிலையில் மரணம் அடைந்த பழனியின் உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பாக திருவான்மியூர் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்த முதல்கட்ட விசாரணையில் சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் கோபுரத்தில் பழனி  சுத்தம் செய்ய, 40 அடி உயர கோபுரத்தில் ஏறியதாகவும், ஆனால் 10 அடி ஏறும்போது தவறி விழுந்ததில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

மரணம் அடைந்த பழனி  சென்னை கொட்டிவாக்கம், சுவாமிநாதன் நகரைச் சேர்ந்தவர் என்றும், அவருக்கு வயது 44 என்றும் தெரிய வந்துள்ளது.

Edited by Siva