Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று ஒரே நாளில் சுமார் 1000 ரூபாய் குறைந்தது தங்கம் விலை.. பொதுமக்கள் மகிழ்ச்சி..!

Written By Siva
Updated: புதன், 1 மே 2024 (11:50 IST)
தங்கம் விலை இன்று ஒரு சவரனுக்கு கிட்டத்தட்ட 1000 ரூபாய் குறைந்துள்ளது பொது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் விலை குறித்த நிலவரங்களை பார்ப்போம்.

தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.920 குறைந்துள்ளது. எனவே மீண்டும் சவரன் 54 ஆயிரத்திற்குள் இருப்பதை அடுத்து பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.  

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.115 குறைந்து 6,635என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 980 குறைந்து ரூபாய் 53,080 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  

சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,105 எனவும் ஒரு சவரன் ரூபாய் 56,840 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் 86.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 86,500.00 எனவும் விற்பனையாகி வருகிறது


Edited by Siva

 
 

எல்லாம் காட்டு

லண்டனில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செய்த ஆதவ் அர்ஜூனா.. வைரல் புகைப்படம்...

2 தொகுதி இடைத்தேர்தல் கருத்துக்கணிப்பு என்ன சொல்லுது? ஒன்னு கன்ஃபர்ம்.. இன்னொன்னு ஊசலாடுது...

டிஆர்பி ராஜா பதவி பறிபோகிறதா? உதயநிதியின் அதிரடி நடவடிக்கை?

ராஜினாமா செய்தவர்கள் மீண்டும் இடைத்தேர்தலில் போட்டியிடுவதா? நீதிமன்றம் அதிருப்தி

இடைத்தேர்தலில் போட்டி இல்லை.. ஆனால் யாருக்கு ஆதரவு. டிவிஸ்ட் வைத்த அன்புமணி...

அடுத்த கட்டுரையில்
Show comments