வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: புதன், 1 மே 2024 (09:05 IST)

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

ஐபிஎல் தொடரின் 17 ஆவது சீசன் மார்ச் மாதம் தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுவரை 48 போட்டிகள் முடிந்துள்ளன இப்போது லீக் சுற்றின் இரண்டாவது பாதி விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இதுவரையிலான போட்டிகளின் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் , லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய  ஆகிய அணிகள் முதல் நான்கு இடங்களில் உள்ளன.

இந்நிலையில் இன்று சென்னை சேப்பாக்கத்தில் நடக்கும் முக்கியமான போட்டியில் சென்னை அணியை எதிர்கொள்கிறது புள்ளிப்பட்டியலில் 8 ஆம் இடத்தில் இருக்கும் பஞ்சாப் அணி. இதுவரை விளையாடிய 9 போட்டிகளில் மூன்றில் மட்டுமே வென்று 6 போட்டிகளை தோற்றுள்ளது பஞ்சாப். அந்த அணியின் கேப்டன் ஷிகார் தவான் காயம் காரணமாக விளையாடாதது அந்த அணிக்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அணி இடையில் சில போட்டிகளை தோற்றாலும் இப்போது வலுவாக கம்பேக் கொடுத்துள்ளது. அந்த அணி  9 போட்டிகளில் ஐந்தை வென்று புள்ளிப் பட்டியலில் நான்காம் இடத்தில் இருக்கிறது. அந்த அணியின் கேப்டன் ருத்துராஜ் மீண்டும் பார்முக்கு திரும்பி அடுத்தடுத்து சிறப்பான இன்னிங்ஸ்களை விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.