திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 30 ஏப்ரல் 2024 (14:33 IST)

இன்னும் சில நாட்களுக்கு மது அருந்த வேண்டாம்.. சென்னை மாவட்ட நிர்வாகம் அறிவுரை..!

அதிகரிக்கும் கோடை வெயில் காரணமாக மதுபானம் அருந்த வேண்டாம் என சென்னை மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் முக்கிய அறிவுரை கூறியுள்ளது.

மேலும் காலை 11 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை தேவையின்றி வெளியே வர வேண்டாம் என  சென்னை மாவட்ட நிர்வாகம், வெயில் அதிகரிப்பதால் மதுபானம் அருந்த வேண்டாம் என்றும், அதற்கு பதிலாக தண்ணீர், பழங்கள் அதிகம் சாப்பிட வேண்டும் என்றும் அறிவுரை கூறியுள்ளது. மேலும் எளிதில் ஜீரணமாகும் இலகுவான உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளது.

வரும் 4ம் தேதி வரை தமிழகத்தின் பல இடங்களில் வெப்ப அலை வீசும் என்பதால் இந்த அறிவுரைகளை சென்னை மக்கள் பின்பற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்படுவதாகவும் சென்னை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே சென்னையில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மதிய நேரத்தில் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பது ஒப்படைத்தது. சென்னையில் கடல் கையில் காரணமாக மதிய நேரத்தில் போக்குவரத்து குறைவாக இருப்பதாகவும் சாலைகளில் ஆள் நடமாட்டமும் குறைவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Edited by Mahendran