வாரத்தின் முதல் நாளில் பங்குச்சந்தையின் நிலவரம் என்ன? சென்செக்ஸ், நிப்டி அப்டேட்..!
இந்திய பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதும், குறிப்பாக அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவு இந்தியா உள்பட ஆசிய பங்குச் சந்தையின் போக்கை திசை மாற்றியது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில், கடந்த வாரம் பங்குச்சந்தை சரிவாக இருந்த நிலையில், தற்போது சரிவிலிருந்து மீண்டு வாரத்தின் முதல் நாளான இன்று பங்குச்சந்தை சிறிதளவு உயர்ந்திருப்பதாக தகவல் உள்ளது. பங்குச் சந்தை வர்த்தகம் ஆரம்பித்து சில நிமிடங்கள் மட்டுமே ஆகி உள்ள நிலையில், இன்று பங்குச்சந்தை சென்செக்ஸ் வெறும் 8 புள்ளிகள் மட்டும் உயர்ந்துள்ளது. ஆனால் இது எந்த நேரத்திலும் சரிவை நோக்கி செல்லவும், அல்லது ஓரளவு உயரவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
சற்று முன், மும்பை பங்குச்சந்தை வெறும் 8 புள்ளிகள் மட்டுமே உயர்ந்து 79,460 என்ற புள்ளிகளிலும், நிப்டி 14 புள்ளிகள் குறைந்து 24,098 என்ற புள்ளிகளிலும் வர்த்தகம் ஆகி வருகிறது. இன்னும் ஒரு சில மணி நேரம் சென்றால் மட்டுமே இன்றைய பங்குச்சந்தை ஏற்றமா அல்லது சரிவா என்பது தெரியவரும்.
இன்றைய பங்குச் சந்தையில் பாரதி ஏர்டெல், பிரிட்டானியா, HCL டெக்னாலஜி, எச்டிஎஃப்சி வங்கி, ஹீரோ மோட்டார்ஸ், ஹிந்துஸ்தான் லீவர், ஐசிஐசிஐ வங்கி ஆகிய பங்குகள் ஏற்றத்தில் இருப்பதாகவும், அப்பல்லோ ஹாஸ்பிடல், ஆசியன் பெயிண்ட், ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், சிப்லா உள்ளிட்டவை சரிவில் வர்த்தகம் ஆகி வருவதாகவும் தகவல் உள்ளது.
Edited by Siva