1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Gold Price Dips for Third Consecutive Day in Chennai: Today's Rates

தங்கத்தின் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாகச் சரிவு: சென்னையில் இன்றைய நிலவரம்!

தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாக குறைந்து வருகிறது. இன்று ஒரு சவரன் தங்கத்தின் விலை 400 ரூபாய் சரிந்து 73,280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
 
கடந்த சில நாட்களாகத் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் நிலவி வருகிறது. கடந்த வியாழக்கிழமை ஒரு சவரன் தங்கம் 1,000 ரூபாய் குறைந்து 74,040 ரூபாய்க்கு விற்பனையானது.
 
நேற்று வெள்ளிக்கிழமை ஒரு கிராம் தங்கம் 45 ரூபாய் சரிந்து 9,210 ரூபாய்க்கும், ஒரு பவுன் தங்கம் 360 ரூபாய் குறைந்து 73,680 ரூபாய்க்கும் விற்பனையானது.
 
இந்த நிலையில் இன்று மூன்றாவது நாளாக தங்கத்தின் விலை குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் 50 ரூபாய் சரிந்து 9,160 ரூபாய்க்கும், ஒரு பவுன் தங்கம் 400 ரூபாய் குறைந்து 73,280 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
 
தங்கம் போலவே வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி 2 ரூபாய் சரிந்து 126 ரூபாய்க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி 1.26 லட்சம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
 
Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
கமல்ஹாசன் ராஜ்யசபா எம்.பி.யாக பதவியேற்பு: மகள் ஸ்ருதிஹாசன் நெகிழ்ச்சி வாழ்த்து!