ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. தேர்தல் 2019 சிறப்பு நிகழ்வுகள்
Written By
Last Updated : ஞாயிறு, 14 ஏப்ரல் 2019 (18:07 IST)

’’ஜே.கே ரித்திஸ் யார் கேட்டாலும் உதவுவார் ’’- கார்த்தி ’உருக்கமான பேட்டி

நடிகரும் முன்னாள் எம்.பியுமான ஜே.கே.ரித்திஷ்(46) திமுக சார்பில் 2009ல் ராமநாதபுரம் எம்.பியாக இருந்துள்ளார்.  திமுகவில் இருந்த அவர் 2014ல் அதிமுகவில் இணைந்தார். பல படங்களில் நடித்திருக்கும் இவர் சமீபத்தில் வெளியான எல்.கே.ஜி படத்தில்  நடித்திருந்தார். திரைத்துறையில் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் முக்கிய பதவி பகித்து வந்தார். தேர்தல் நெருங்குவதால் கட்சி பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வந்தார்.
இந்நிலையில் நேற்று மதியம் அவர் ராமநாதபுரத்தில் உள்ள தனது வீட்டில் சாப்பிட்டுவிட்டு ஓய்வெடுத்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவரது இந்த திடீர் மறைவுக்கு திரைத்துரையினர் உள்பட பல்வேறு தரப்பினர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
 
தற்போது ஜே.கே.ரித்திஷின் மறைவு நடிகர் சங்கத்திற்கு பேரிழப்பு என்று அவருக்கு அஞ்சலி செலுத்திய பின் நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.
 
அவர் கூறியுள்ளதாவது :
 
 நடிகர் சங்க வளர்ச்சிக்காக மிகவும் பாடுபட்டவர் தான் ஜே.கே. ரித்தேஷ். யார் வந்து உதவி கேட்டாலும் எவ்வித தயக்கமும் இன்றி உதவி செய்பவர் ரித்தேஷ். இவ்வாறு அவர் தெரிவித்தார்.