ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. தேர்தல் 2019 சிறப்பு நிகழ்வுகள்
Written By
Last Modified: ஞாயிறு, 14 ஏப்ரல் 2019 (14:52 IST)

மீன் கொடுப்பதை விட, மீன் பிடிக்க கற்றுக் கொடுப்பேன் - சமுத்திரகனி

அனைத்துக் கட்சிகளும் வரும் மக்களவைத் தேர்தலுக்காக தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் இருபெரும் திராவிட கட்சிகள் போட்டா போட்டி போட்டுக்கொண்டு களப்பணியாற்றி வருகின்றனர்.  இந்நிலையில் இயக்குநர்  சமுத்திரகனி சில நாட்களுக்கு முன்னர் மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மா.கம்யூனிஸ்டு வேட்பாளரான எழுத்தாளர்  சு. வெங்கடேசனை ஆதரித்து பிரசாரம் செய்தார்.
சட்டமேதை அம்பேத்கரின் 128 ஆவது பிறந்த நாளான இன்று பெசண்ட் நகர் கடற்கரையில் தேர்தல் விளைப்புணர்வு மாராத்தான் நடைபெற்றது.
 
இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட நடிகரும் இயக்குநருமான சமுத்திரகனி மாராத்தான் ஓட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் கூறியதாவது :
 
வேட்பாளர்கள் குறித்த தகவல்களை ஆராய்ந்து பார்த்து வாக்களிக்க வேண்டும் என்று முதல்தலைமுறை வாக்காளர்களிடம் கேட்டுக்கொண்டார்.
 
மேலும், புரட்சியாளர் அம்பேத்கார் சொன்ன மாதிரி நீ இந்த நிலைமையில் இருக்கிறாய் என்பதை உணர்த்துவது மட்டும்தான் எங்களுடைய வேலை. அதனால்,  மீன் பிடித்துக் கொடுக்க விருப்பமில்லை என்றும், மீன் பிடிக்க கற்றுக் கொடுக்கவே விரும்புகிறேன். இவ்வாறு அவர் தெரொவித்தார்.