வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. தேர்தல் 2019 சிறப்பு நிகழ்வுகள்
Written By
Last Updated : ஞாயிறு, 14 ஏப்ரல் 2019 (16:24 IST)

மோடியின் குரலில் டப் மாஸ் : பிரபல அரசியல் தலைவரின் ’வைரல் வீடியோ’

அனைத்துக் கட்சிகளும் வரும் மக்களவைத் தேர்தலுக்காக தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர். கடந்த மக்களவைத் தேர்தலில்  போட்டியிட்ட பிரதமர் மோடி மக்களிடம் வாக்குறுதி கொடுப்பதை அவரது குரலில் லாலு பிரசாத் யாதவ் டப்மாஸ் செய்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மக்களவை தேர்தலுக்காக அனைத்துக் கட்சிகளும் பரபரப்பாக இயங்கி வருகின்றனர். இந்நிலையில் ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவரும் பீஹார் மாநிலத்தின் முன்னாள் முதல்வரான லாலு பிரசாத் யாதவ் பிரதமர் மோடியை விமர்சிப்பது போல ஒரு டப்மாஸ் வீடியோவை பதிவிட்டுள்ளனர்.
 
அதில் அவர் கூறியுள்ளதாவது :
கடந்த 2014 ஆம் ஆண்டில் மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது இந்தியர்கள் அனைவரது வங்கிக் கணக்கிலும் 15 லட்ச ரூபாய் செலுத்தப்படும் என்று  மோடி கூறியது போல தற்போது அவரது குரலுக்கு லாலு பிரசாத் டப்மாஸ் செய்துள்ளார். தற்போது இது வைரலாகி வருகிறது.