வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By Senthil Velan
Last Updated : புதன், 20 மார்ச் 2024 (08:24 IST)

4 தொகுதிகளில் நாதக இன்று வேட்பு மனுதாக்கல்..! எந்தெந்த தொகுதிகள்..?

seeman
மக்களவைத் தேர்தலையொட்டி நாம் தமிழர் கட்சி சார்பில் நான்கு தொகுதிகளில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்யப்பட உள்ளது.
 
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 19-ந் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. தேர்தலையொட்டி தமிழகத்தில் இன்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. 
 
வேட்புமனு தாக்கல் செய்ய இந்த மாதம் 27-ந் தேதி கடைசி நாளாகும். வேட்பு மனு மீதான பரிசீலனை மார்ச் 28-ந் தேதி நடைபெறுவதுடன், மனுக்களைத் திரும்பப் பெற மார்ச் 30-ந் தேதி கடைசி நாளாகும்.
 
வேட்பு மனு தாக்கல் செய்யும்போது வேட்பாளருடன் சேர்த்து ஐந்து பேருக்கு மட்டும் அனுமதி உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தேர்தல் அதிகாரிகள் விதித்துள்ளனர்.

 
இந்நிலையில் மக்களவைத் தேர்தலையொட்டி நாம் தமிழர் கட்சி சார்பில் நான்கு தொகுதிகளில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்யப்பட உள்ளது. மத்திய சென்னை, கள்ளக்குறிச்சி, அரக்கோணம் மற்றும் புதுச்சேரி ஆகிய தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.