வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : புதன், 20 மார்ச் 2024 (08:09 IST)

நெருங்கும் ஐபிஎல் திருவிழா.! சென்னை வந்தடைந்த ஆர்.சி.பி வீரர்கள்..!!

Virat Kohli
வருகிற 22 ஆம் தேதி ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ள நிலையில், சேப்பாக்கத்தில் நடைபெறும் முதல் போட்டியில் பங்கேற்க ஆர்சிபி அணியின் வீரர்கள் சென்னை வந்தடைந்தனர்.
 
ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நாளை மறுநாள் தொடங்குகிறது.  இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை மார்ச் 18-ம் தேதி நடைபெற்றது.
 
இந்த போட்டியில் பங்கேற்பதற்காக, சிஎஸ்கே அணியின் வீரர்கள் எப்போது சென்னை வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி கடந்த 5-ம் தேதி சென்னை வந்தடைந்தார். தொடர்ந்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் அடுத்தடுத்து சென்னை வந்தடைந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 
இந்நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இன்று காலை சென்னை வந்தடைந்தனர். ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலியை அவரது ரசிகர்கள் பெரும் ஆரவாரத்துடன் காலையிலேயே விமான நிலையத்தில் வரவேற்றனர். அத்துடன் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி பெயரும் கூறி ஆரவாரம் செய்து, விராட் கோலிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.