1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 19 மார்ச் 2024 (13:55 IST)

ஆட்டோ ரிக்‌ஷா சின்னமும் இல்லை.. நாம் தமிழர் கட்சிக்கு தொடரும் சோதனை..!

கரும்பு விவசாயி சின்னத்தை இழந்த நாம் தமிழர் கட்சி ஆட்டோ ரிக்‌ஷா சின்னத்தை குறி வைத்துள்ளதாக கூறப்பட்ட நிலையில் அந்த சின்னமும் வேறொரு கட்சிக்கு வழங்கப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
கடந்த சில தேர்தலில் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சிக்கு இந்த முறை அந்த சின்னம் கிடைக்கவில்லை என்பதும் வேறொரு கட்சிக்கு அந்த சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி விட்டதை அடுத்து இது குறித்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்தது. 
 
இந்நிலையில் கரும்பு விவசாயி சின்னம் கிடைக்காத நிலையில் ஆட்டோ ரிக்‌ஷா சின்னம் பெற நாம் தமிழர் கட்சி திட்டமிட்டு இருந்தது என்பதும் அக்கட்சியின் தலைவர்கள் ரஜினி அஜித் விஜய் உள்ளிட்டவர்கள் பயன்படுத்திய சின்னத்தை நாங்கள் பெற போகிறோம் என்று மறைமுகமாக ஆட்டோ ரிக்‌ஷா சின்னத்தை கூறினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின் படி ஆட்டோ ரிக்‌ஷா சின்னம் நாடாளும் மக்கள் கட்சி என்ற கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் நாம் தமிழர் கட்சிக்கு சின்னம் விஷயத்தில் சோதனை தொடர்ந்து கொண்டிருப்பதாக தெரிகிறது,.
 
Edited by Siva