வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 18 மார்ச் 2024 (12:47 IST)

கரும்பு விவசாயி சின்னம்.. மனுவை மின்னஞ்சலில் அனுப்புமாறு தலைமை நீதிபதி அறிவுரை

நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்காததை அடுத்து உச்சநீதிமன்றத்தில் சீமான் கட்சியினர் தாக்கல் செய்த மனு அவசரமான விசாரிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததை அடுத்து மனுவை மின்னஞ்சலில் அனுப்புமாறு சுப்ரீம் கோர்ட் நீதிபதி அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

சீமானின் நாம் தமிழர் கட்சி கடந்த சில தேர்தலில் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்ட நிலையில் இந்த சின்னம் வேறொரு கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது

இந்த நிலையில் கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்க வேண்டும் என்ற வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக முறையீடு செய்யப்பட்டது

இந்த முறையிட்டை அடுத்து மனுவை மின்னஞ்சலில்  அனுப்புமாறு தலைமை நீதிபதி அறிவுறுத்தியதாகவும் இன்றைய வழக்குகளின் விசாரணை முடிந்த பிறகு மின்னஞ்சலை பார்த்து முடிவு எடுப்பதாகவும் தலைமை நீதிபதி பதிலளித்தார்

இதனை அடுத்து நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்க கோரும் மனுவை மின்னஞ்சலில் அனுப்ப உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Edited by Mahendran