திமுக கூட்டணிக்கு வேட்பாளருக்கு விஜய் ரசிகர்கள் ஆதரவு !

Last Updated: திங்கள், 18 மார்ச் 2019 (21:24 IST)
விஜய்யின் ரசிகர் மன்றத்தை சேர்ந்த சிலர் மதுரையில் போட்டியிட இருக்கும் மார்க்சிஸ்ட் வேட்பாளரான சு வெங்கடேசனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரைத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த மதுரைத் தொகுதியில் அக்கட்சியின் எழுத்தாளரான சு வெங்கடேசன் போட்டியிடுகிறார். நேற்று அவரை சந்தித்த விஜய் ரசிகர் மன்ற மதுரை மாவட்ட பொறுப்பாளர் தங்கப்பாண்டி உள்ளிட்டோர் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.

சமீபகாலமாக விஜய்யும் அவரது ரசிகர்களும் ஆளும் அதிமுக அரசு மற்றும் பாஜக அரசு ஆகியவற்றின் மீது கோபத்தில் உள்ளனர். மெர்சல் மற்றும் சர்கார் ஆகியப் படங்களுக்கு அதிமுக மற்றும் பாஜக அரசுகள் தொந்தரவைக் கொடுத்தன. குறிப்பிட்ட படங்கள் ஓடும் தியேட்டர்களின் முன்னால் போராட்டங்கள் நடத்தி படஙகளை ஓடவிடாமல் செய்தனர்.

விஜய்யும் தன் பங்கிற்கு இவ்விரு அரசுகளையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.  இதனால் அதிமுக – பாஜக இணைந்துள்ள கூட்டணியை வீழ்த்துவதற்காக விஜய் ரசிகர்கள் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிக்கலாம் எனத் தெரிகிறது.இதில் மேலும் படிக்கவும் :