வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Updated : திங்கள், 18 மார்ச் 2019 (21:24 IST)

ஏமாற்றிய அதிமுக : திமுகவிற்கு தாவிய அதிமுக முன்னாள் அமைச்சர்

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் சீட் கிடைக்காத விரக்தியில் திமுக தரப்பிற்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலுக்காக திமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட நிலையில் நேற்று அதிமுகவும் 20 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்தது
 
தென் சென்னை - ஜெயவர்தன்
 
திருவள்ளூர் - டாக்டர் P வேணுகோபால்
 
காஞ்சிபுரம் - மரகதம் குமரவேல்
 
கிருஷ்ணகிரி - கே.பி முனுசாமி
 
திருவண்ணாமலை - அக்ரி கிருஷ்ணமூர்த்தி
ஆரணி - செஞ்சி ஏழுமலை
 
சேலம் - KRS சரவணன்
 
நாமக்கல் - P காளியப்பன்
 
ஈரோடு - G மணிமாறன்
 
திருப்பூர் - எம்.எஸ்.எம் ஆனந்தன்
 
நீலகிரி - M தியாகராஜன்
 
பொள்ளாச்சி - C. மகேந்திரன்
 
கரூர் - டாக்டர் மு. தம்பிதுரை
 
பெரம்பலூர் - NR சிவபதி
 
சிதம்பரம் - சந்திரசேகர்
 
மயிலாடுதுறை - S ஆசைமணி
நாகை - தாழை ம.சரவணன்
 
மதுரை - VVR ராஜ்சத்யன்
 
தேனி - ரவீந்திரநாத் குமார்
 
நெல்லை - மனோஜ் பாண்டியன்
 
இதில் பல அதிமுக முக்கிய புள்ளிகள் சீட் கிடைக்காத விரக்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
 
இந்நிலையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சரும் ஓபிஎஸ் ஆதரவாளருமான ராஜகண்ணப்பன் மக்களவை தேர்தலில் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தார். ஆனால் அவர் எந்த தொகுதியிலும் முன் நிறுத்தப்படவில்லை.
 
இதனால் கட்சி தலைமை மீது அதிருப்தியடைந்த அவர், திமுகவில் இணைய இருக்கிறார். அவர் இன்று மாலை அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலினை சந்தித்து தனது ஆதரவை திமுகவிற்கு அளிக்க இருக்கிறார்.