திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. தேர்தல் 2019 முக்கிய வேட்பாளர்கள்
Written By
Last Updated : திங்கள், 18 மார்ச் 2019 (21:23 IST)

தேமுதிக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

வரும் பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைக்க அதிமுக, தேமுதிக என இரண்டு கூட்டணியிலும் ஒரே நேரத்தில் பேச்சுவார்த்தை நடத்தி ஊடகங்களில் அசிங்கப்பட்ட தேமுதிக, கடைசியில் திமுகவின் கதவு அடைக்கப்பட்டதால் அதிமுக கொடுத்த நான்கு தொகுதிகளுக்கு ஒப்புக்கொண்டு கூட்டணி அமைத்தது. 
 
இந்த நிலையில் தேமுதிகவுக்கு வடசென்னை, கள்ளக்குறிச்சி, திருச்சி மற்றும் விருதுநகர் என நான்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் இந்த நான்கு தொகுதிகளுக்கும் தற்போது வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. தேமுதிகவின் வேட்பாளர் பட்டியல் இதோ:
 
கள்ளக்குறிச்சி - எல்.கே.சுதீஷ்
 
வடசென்னை - அழகாபுரம் மோகன்ராஜ்
 
திருச்சி - டாக்டர் இளங்கோவன்
 
விருதுநகர் - ஆர்.அழகர்சாமி
 
இந்த தேர்தலில் தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படது. ஆனால் அவரது பெயர் வேட்பாளர் பட்டியலில் இல்லாதது அக்கட்சியின் தொண்டர்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக கூறப்படுகிறது