ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By
Last Updated : வியாழன், 4 ஜூலை 2019 (19:32 IST)

அந்த பிரம்மாண்ட நடிகர் ஆல் அடையாளமின்றி மெலிந்ததற்கு இது தான் காரணமாம்!

உலகமே வியந்து பார்த்த அந்த பிரம்மாண்ட படத்தில் மிரளவைக்கும் கதாபாத்திரத்தில் நடித்து உலகப்புகழ் சம்பாதித்தார் அக்கட தேசத்து நடிகர். அந்த படத்தில் அவரின் பிரம்மாண்ட உடல் தோற்றத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் அலறவைத்தார். 
அந்த படத்தில் கிடைத்த பேராதரவை வைத்து அடுத்தடுத்து புகழ்பெற்ற இயக்குனர்கள் படத்தில் தொடர்ந்து நடித்து வந்தார். இந்த நடிகருக்கு கோலிவுட்டின் பிரபல நடிகையுடன் காதல் இருந்தது. அதனை நிரூபிக்கும் விதத்தில் இருவரும் சேர்ந்து அடிக்கடி அவுட்டிங் செல்வது , விருது விழாக்களில் சேர்ந்து பங்கேற்பது என கிசு கிசுக்களுக்கு ஆதாரம் கொடுத்து தங்களது காதலை நிருபித்து வந்தனர். பின்னர் ஒரு சில மாதங்களிலேயே இவர்களின் காதல் முறிந்து விட்டதாக டோலிவுட்டில் தலைப்பு செய்தியாக பேசப்பட்டது. 
 
இந்நிலையில் சமீபத்தில் இந்த பிரம்மாண்ட நடிகர் தனது உடல் எடையை ஓவராக குறைத்து மிகவும் ஒல்லியாக இருக்கும் புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வந்தார். காரணம் அவருக்கு கிட்னி செயலிழந்துவிட்டது என்றும், அதற்காக தற்போது சிகிச்சை எடுத்து வருவதாகவும் அதனால் தான் அவர் உடல் எடையை இழந்துள்ளார்  என்றும் கூறப்படுகிறது.