கார்த்தியை எதிர்த்து ஜெயம் ரவி போட்டியா? நடிகர் சங்க தேர்தலில் பரபரப்பு
நடிகர் சங்க தேர்தலில் பாண்டவர் அணியில் இருந்து ஏற்கனவே உள்ள நிர்வாகிகளே கிட்டத்தட்ட மீண்டும் போட்டியிடுகின்றனர். துணைத்தலைவர் பதவியில் இருந்த பொன்வண்ணன் மட்டும் மீண்டும் போட்டியிடவில்லை. மேலும் பாண்டவர் அணிக்கு எதிராக கடந்த தேர்தலில் களமிறங்கிய சரத்குமார் அணியில் சரத்குமார், ராதாரவி இருவருமே சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதால் அவர்கள் போட்டியிட முடியாத சூழல் மட்டுமின்றி அந்த அணியே தற்போது இல்லை
இதனால் பாண்டவர் அணி இந்த தேர்தலில் மிக எளிதில் வெற்றி பெற்றுவிடும் என்று கணிக்கப்பட்டது. இந்த நிலையில் திடீர் திருப்பமாக நடிகரும் கல்வியாளருமான ஐசரி கணேஷ், பாண்டவர் அணிக்கு எதிராக ஒரு அணியை களமிறக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் ஐசரிகணேஷின் அணியை வலுசேர்க்க அதில் பிரபல நடிகர்களை இழுக்கும் முயற்சியும் நடந்து வருகிறது.
முதல்கட்டமாக ஐசரிகணேஷ் அணியில் நடிகர் ஜெயம் ரவி இணைந்துள்ளதாகவும், அவர் நடிகர் கார்த்தியை எதிர்த்து பொருளாளர் பதவிக்கு போட்டியிடவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளதால் நடிகர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி விஷால் மற்றும் நாசருக்கு எதிராகவும் பிரபல நடிகர்களை களமிறக்க ஐசரி கணேஷ் அணி திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது