புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By
Last Updated : புதன், 12 ஜூன் 2019 (16:44 IST)

ஆஹான்..! காதல் அழகிக்கு கிரிக்கெட் வீரருடன் அப்படி ஒரு காதலாம்!

அக்கட மாநிலத்தில் பிறந்து வளர்ந்த அழகி அன்பை வெளிப்படுத்தும் படத்தின் மூலம் பவ்யமான நடிகையாக புகழ்பெற்றார். அந்த படத்தின் மூலம் அம்மணிக்கு கிடைத்த அமரோக வரவேற்பையடுத்து கோலிவுட்டிற்கு பெரிய வீட்டு மாப்பிள்ளையின் மூலம் கால்தடம் பதித்தார். 
 
ஒரே படத்தில் ஆஹா ஓஹோன்னு பாராட்டுக்கள் குவிந்த இவருக்கு அடுத்தடுத்து படவாய்ப்புகள் குறைந்து கொண்டே சென்றது. இந்த கேப்பில் தான் அம்மணி  ட்விட்டரில் ரொம்பவே ஆக்டிவ்வாக இருக்க ஆரம்பித்தார். வேலையில்லாமல் வெட்டியாக வீட்டில் இருந்துவந்த இவர் போர் அடிக்கும் போதெல்லாம்  தனது அழகிய புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துவந்தார். 
 
இந்நிலையில் தான் வெட்டியாக படுத்துறங்கும் நேரங்களிலெல்லாம் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவரின் ட்வீட்டுகளை ரீட்வீட் செய்து எப்போதும் அவரின் ட்விட்டர் கணக்கை ஆராய்வதே வேலையாக வைத்திருந்திருக்கிறார். துரும்பு கிடைத்தும் சும்மா விடுவார்களா ரசிகர்கள்,  
ஏன் சம்பந்தமே இல்லாமல் அந்த கிரிக்கெட் வீரரின் ட்வீட்டுகளை ரீட்வீட் செய்கிறீர் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்ப அம்மணி காப்சிப்னு அமைதியாகிட்டார். 
 
ஆஹான் ரூட் அப்டிபோகுதா ரைட்டு... நடிகை காதலிப்பது உண்மைதானோ என அவரது ரசிகர்கள் ஆளுக்கொரு மூலையில் குழம்பி வருகிறார்கள்.