திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By
Last Updated : வியாழன், 27 ஜூன் 2019 (19:38 IST)

தம்பி வயது நடிகருடன் டேட்டிங் சென்ற பிரபல வீட்டின் மருமகள்!

பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளரின் மகனான அந்த இளம் நடிகருடன் இந்தி திரையுலகத்தில் ஸ்டார் வீட்டு மருமகளுடன் காதல் வலையில் விழுந்துள்ள விவகாரம் தான் பாலிவுட்டின் தற்போதைய ஹாட் கிசுகிசுவாக பேசப்பட்டு வருகிறது. 
தன்னை விட 12 வயது குறைவான அந்த நடிகருடன் நடிகைக்கு காதல் வந்துவிட்டது. இந்த காதல் அம்மணிக்கு தன் கணவருடன் வாழ்ந்துக்கொண்டிருக்குபோதே வந்தது ஊரறிந்த உண்மை. இதனை அறிந்த அந்த நடிகையின் கணவர் விவாகரத்து செய்துவிட்டு உறவை முறித்துக்கொள்ள அம்மணிக்கு நன்கு சவுகரியமாக ஆகிவிட்டது.
 
பின்னர் அடிக்கடி இந்த  இளம் நடிகருடன் கேட்பாரின்றி ஊர்சூற்ற ஆரம்பித்துவிட்டார். இவர்கள் லூட்டியடிக்கும் புகைப்படங்கள் மீடியாவுக்கு தீனியாகவும் அமைந்தது. ஆனால், அதை பற்றியெல்லாம் கவலை படாமல் ஜாலியாக  உலா வந்த இந்த ஜோடி தற்போது தங்களின் காதலை உறுதி செய்துள்ளனர். 
 
இந்நிலையில் நடிகரின் பிறந்த நாளுக்கு சமூக வலைதளத்தில் வாழ்த்து சொன்ன நடிகை தன் காதலை தெரிவித்துள்ளார். தற்போது இந்த செய்தி தான் பாலிவுட் சினிமாவின் தலைப்பு செய்தியாக பேசப்பட்டு வருகிறது.