வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 7 மார்ச் 2019 (14:01 IST)

’அதற்காக’ என்னை பிரம்பால் அடித்து முழங்காலிடச் செய்தார் - சித்தார்த் ’ டுவிட் ’

அட்டர்னி ஜெனரல் கேகே.வேணுகோபால், நேற்று ரஃபேல் போர் விமான ஒப்பந்தங்கள் தொடர்பான ஆவணங்கள் பாதுகாப்பு அமைச்சகத்திலிருந்து திருடப்பட்டதாக உச்ச  நீதிமன்றத்தில் குற்றம் சாட்டை முன்வைத்தார்.
இது நாடு முழுவதும் பெரும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இது சம்பந்தமாக பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
 
இந்நிலையில் இதுகுறித்து நடிகர் சித்தார்த் தனது டுவிட்டர் பக்கத்தில்  பதிவிட்டுள்ளதாவது:
 
நான் பள்ளியில் படிக்கின்ற போது என் பாட நோட்டுகள் இதே போன்று காணாமல் போயின...இதை ஆசிரியரிடம்  கூறிய போது அவர் என்னை மண்டியிடச் செய்து பிரம்பால் அடித்தார்.. அது அப்போது..என்று பதிவிட்டுள்ளார். 
ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள் காணாமல் போனதாக கேகே வேணுகோபால் கூறியதற்காக  சித்தார்த் கிண்டலாக இந்த டுவிட்டை பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.