பகுத்தறிவாளர் கமல்ஹாசனா இப்படி கூறினார்?
கமல்ஹாசன் ஒரு பகுத்தறிவாளர் என்பதால் மூட நம்பிக்கைகளுக்கு அவர் இதுவரை இடம் கொடுத்ததே இல்லை. அவருடைய திரைப்படங்களின் தொடக்கவிழா பூஜையில் கூட அவர் கலந்து கொள்வதில்லை. சமீபத்தில் கூடநேரம் காலம் பார்த்து கட்சி ஆரம்பிக்க மாட்டேன், ஆரம்பிக்க வேண்டும் என்று தோன்றினால் ஏதாவது ஒரு நாளில் தொடங்கிவிடுவேன் என்று கூறினார்
இந்த நிலையில் நேற்று கமல்ஹாசன் தனது ரசிகர் மன்றத்தின் நிர்வாகிகளிடம் ஆலோசனை செய்தார். அரசியல் கட்சி ஆரம்பிப்பது குறித்து அவர் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கமல்ஹாசனுடன் ஆலோசனையை முடித்துவிட்டு திரும்பிய சேலம் மாவட்ட ரசிகர் மன்ற தலைவர் கோபால் அவர்கள் கூறியபோது, 'நற்பணி மன்றத்தின் மீது கண்ணு பட்டு விட்டது! கவனமாக செயல்படுமாறு கமல் அறிவுறுத்தியதாக கூறினார். பகுத்தறிவாளரான கமல் கண்பட்டுவிட்டது என்பதையெல்லாம் நம்புகிறாரா? அல்லது கோபால் மாற்றி சொல்கிறாரா என்பது அந்த ஆண்டவருக்குத்தான் வெளிச்சம்