செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By sivalingam

ரஜினி-கமலும் ரூ.2000 கோடி வியாபாரமும்: ஒரு அதிர்ச்சி தகவல்

ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் அரசியலுக்கு தனித்தனியாக வருவார்களா? இணைந்து வருவார்களா? எப்போது வருவார்கள்? தனிக்கட்சிகள் ஆரம்பிப்பார்களா? என்ற கேள்விகள் எழுந்துள்ள நிலையில் இருவருமே தங்கள் தொழிலில் சிரத்தையாக இருந்து பணம் சம்பாதிப்பதை செவ்வனே செய்து வருகின்றார்கள் என்று கூறப்படுகிறது.



 
 
அடுத்த ஆண்டு மட்டும் ரஜினியின் '2.0' மற்றும் 'காலா' ஆகிய இரண்டு படங்கள் வெளிவரவிருக்கின்றன. அதேபோல் அடுத்த ஆண்டு கமல்ஹாசனுக்கு 'சபாஷ் நாயுடு', 'விஸ்வரூபம் 2' மற்றும் 'இந்தியன் 2' ஆகிய மூன்று படங்கள் வெளியாகவுள்ளன. இந்த ஐந்து படங்களும் சேர்த்து சுமார் ரூ.2000 கோடி வியாபாரம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி இந்த வியாபாரத்தை மேலும் மேலும் அதிகரிப்பதே இருவரின் எண்ணம் என்றும், உண்மையில் இருவருமே அரசியலுக்கு வர வாய்ப்பே இல்லை என்றும் விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். ஆக மொத்தத்தில் வழக்கம் போல் ஏமாளிகள் மக்கள் தான் என்பதே உண்மை