ரஜினி, கமல் மட்டும்தான் அரசியலுக்கு வரவேண்டுமா?: பிரபல இயக்குநரின் மனைவி
பிரபல இயக்குநரின் மனைவியும், நடிகையுமான சுஹாசினி அரசியலுக்கு வர தயார் என தெரிவித்துள்ளார். சென்னை வேளச்சேரியில் உள்ள வணிக வளாகத்தில் அரசு சாரா தொண்டு நிறுவனங்களுக்கு ஆதரவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியின்போது செய்தியாளர்களைச் சந்தித்த நடிகை சுஹாசினி, நடிகர்கள் ரஜினி மற்றும் கமல்ஹாசன் மட்டும்தான் அரசியலுக்கு வர வேண்டுமா என கேள்வி எழுப்பினார். மேலும் திரைப்படத் துறையிலிருந்து பெண்கள் அரசியலுக்கு வருவதில்லையா? என கேட்பது மோசமானது என கூறியுள்ளார். மேலும் கூறுகையில், கமல்ஹாசனும், ரஜினிகாந்தும் மட்டும்தான் அரசியலுக்கு வர வேண்டுமா? ஏன் ராதிகாவும், ரேவதியும், பூர்ணிமாவும், நதியாவும்தான் அரசியலுக்கு வரலாம். இவையெல்லாம் மக்கள் விரும்பினால் சாத்தியமாகும். ஜெயலலிதாவை நம்பி பெரிய பொறுப்பை கொடுத்ததுபோல், எங்களை நம்பி பொறுப்புகளை கொடுங்கள். நாங்களும் அரசியலுக்கு வர தயாராக இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.