செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam (Sasi)
Last Modified: புதன், 4 அக்டோபர் 2017 (10:47 IST)

வெப் சீரியலில் நடிக்கும் அக்‌ஷரா ஹாசன்

கமல்ஹாசனின் இளைய மகளான அக்‌ஷரா ஹாசன், வெப் சீரியலில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

 
 
வெளிநாடுகளைப் போலவே தமிழ்நாட்டிலும் வெப் சீரியல்கள் ஃபேமஸாகி வருகின்றன. பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளியான ‘ஆஸ் ஐயாம் சஃபரிங் ப்ரம் காதல்’ வெப் சீரியலுக்கு, நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. வெப் சீரியலுக்கு சென்சார் இல்லாததால், ஏகப்பட்ட கெட்ட வார்த்தைகள் வெளிப்படையாக இந்த சீரியலில் பயன்படுத்தப்பட்டிருந்தன.
 
இதன் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் கெளதம் மேனன், நடிகர் தனுஷ் ஆகியோர் வெப் சீரியல் தயாரித்து வருகின்றனர். இந்நிலையில், கமல்ஹாசனின் இளைய மகளான அக்‌ஷரா ஹாசனிடம் ஒரு வெப் சீரியலில் நடிக்க பேச்சுவார்த்தை  நடைபெற்று வருகிறது. இந்த சீரியலில், ‘பாகுபலி’ புகழ் ராணா டகுபதி ஹீரோவாக நடிக்கிறார்.