Daily Horoscope
✕

மேசேஜ் அனுப்பு நேரம் குறிக்கலாம்!.. வாட்ஸ் அப்பில் புதிய வசதி அறிமுகம்...

Updated: வியாழன், 26 நவம்பர் 2026 (11:06 IST)
உலகம் முழுவதும் உள்ள மக்கள் செல்போனில் வாட்ஸ்அப் செயலியை அதிகமாக பயன்படுத்துகிறார்கள். இதில் மெசேஜ் மட்டுமில்லாமல்,  புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் ஆவணங்களையும் அனுப்ப முடியும். மேலும், வீடியோ காலிலும் பேச முடியும். அதன்பின் whatsapp மூலம் பணம் அனுப்பும் வசதியும் வந்துவிட்டது. ஒரு பக்கம் whatsapp செயலில் புதுப்புது அம்சங்களை அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது..

அந்தவகையில், வாட்ஸ் அப்பில் Schduled Message வசதி அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. 10 நிமிடங்கள் முதல் 14 நாட்கள் வரை முன்கூட்டியே நேரத்தை தேர்வு செய்து, தனிப்பட்ட மற்றும் குழு சாட்களில் மெசேஜ்களை அனுப்பமுடியும்.  Text, Photos மற்றும் வீடியோக்களையும் அனுப்பலாம்.

போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தாலும் திட்டமிட்ட நேரத்தில் மெசேஜ் சென்றடையும். மேசேஜ்கள் End-to-End Encryption பாதுகாப்புடன் இருக்கும் எனவும், இந்த வசதி உலகம் முழுவதும் அடுத்த சில வாரங்களில் படிப்படியாக அறிமுகமாகும் எனவும் சொல்லப்பட்டிருக்கிறது.
About Author
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More

எல்லாம் காட்டு

குடியுரிமை விவகாரத்தில் டிரம்புக்கு பின்னடைவு.. அமெரிக்க நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு...

இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு.. ரூ.88,000 வரை கிடைக்கும்...

தீபம் ஏற்றும்போது விபத்து!.. தந்தை, மகள் பலி.. சென்னையில் சோகம்..

இனி ஸ்மார்ட்போனில் இருந்து எதையுமே திருட முடியாது.. தமிழக அரசின் குவாண்டம் சேஃப் திட்டம்....

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26ஆம் தேதி இதை செய்தே ஆக வேண்டும்.. பள்ளிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் உத்தரவு...

அடுத்த கட்டுரையில்
Show comments