வியாழன், 29 பிப்ரவரி 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Prasanth.K
Last Modified: புதன், 9 ஆகஸ்ட் 2023 (12:22 IST)

பேருதான் வேற.. ஸ்டைல், கேமரா எல்லாம் ஒரே மாதிரி..! – POCO M6 Pro Vs Redmi 12 5G!

POCO M6 Pro Vs Redmi 12 5G comparison
இந்தியாவில் 5ஜி ஸ்மார்ட்போன்கள் அதிகம் வெளியாகி வரும் நிலையில் சமீபத்தில் வெளியாகியுள்ள POCO M6 Pro 5G ஸ்மார்ட்போன் மற்றும் Redmi 12 5G கிட்டத்தட்ட ஒரே சிறப்பம்சங்களை கொண்ட ஸ்மார்ட்போன்களாக வெளியாகியுள்ளன.POCO M6 Pro 5G மற்றும் Redmi 12 5G இரு மாடல்களுமே ஸ்னாப்ட்ராகன் 4 Gen 2 சிப்செட்டில் செயல்படுகின்றன. இரண்டிலுமே 50 எம்பி டூவல் பிரைமரி கேமராவும், 8 எம்.பி செல்பி கேமராவும் உள்ளது. 5000 mAh பேட்டரி மற்றும் 18W பாஸ்ட் சார்ஜிங் சிறப்பம்சங்கள் இரண்டு மாடல்களிலுமே உள்ளன.

Redmi 12 5G


POCO M6 Pro 5G மற்றும் Redmi 12 5G  இரண்டு ஸ்மார்ட்போன்களின் ஸ்டைலும் கேமராவும் கூட ஒரே மாதிரியாக அமைந்துள்ளன. ஆனால் ரேம் மற்றும் இண்டெர்னல் ஸ்டோரேஜ் பொறுத்து இரண்டு மாடல்களும் அதன் விலைகளும் மாறுபடுகின்றன.

POCO M6 Pro Vs Redmi 12 5G


POCO M6 Pro 5G ஸ்மார்ட்போன் 4GB + 64GB வேரியண்ட் ரூ.10,999-க்கும், 6GB + 128GB வேரியண்ட் ரூ.12,999-க்கும் விற்பனையாகிறது. Redmi 12 5G ஸ்மார்ட்போன் 4GB + 128GB வேரியண்ட் ரூ.11,999-க்கும், 6GB + 128GB வேரியண்ட் ரூ.13,499-க்கும், 8GB + 256GB வேரியண்ட் ரூ.15,499-க்கும் விற்பனையாகிறது. விலை பொறுத்தவரை ரெட்மியை விட போக்கோவில் ஒரே சிறப்பம்சங்கள் கொண்ட மாடல் ரூ.1000 வரை விலை குறைவாக உள்ளது.

Edit by Prasanth.K