டெலிகிராமுக்கு தாவிய 5 கோடி பேர்! – வயிற்றெரிச்சலில் வாட்ஸப்!
வாட்ஸப் நிறுவனத்தின் புதிய தனிநபர் கொள்கை சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் டெலிகிராம் இன்ஸ்டால் செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
உலகம் முழுவதும் தகவல் தொடர்புக்கு அதிகமாக பயன்படுத்தும் செயலிகளில் வாட்ஸப் முக்கியமானதாக உள்ளது. 5 பில்லியனுக்கும் அதிகமான பயனாளர்களை கொண்ட வாட்ஸப் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட தனிநபர் நிபந்தனைகள் மற்றும் கொள்கைகள் உலகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. இந்த புதிய கொள்கைகளால் தனிநபர் தகவல்களை வாட்ஸப் பிற நிறுவனங்களோடு பகிர்ந்து கொள்ளும் அபாயம் உள்ளதாக கூறப்பட்டது.
இதை தொடர்ந்து வாட்ஸப்பு எதிர்ப்புகள் உருவாக தொடங்கியுள்ள நிலையில் உலகம் முழுவதும் மக்கள் வாட்ஸப்புக்கு பதிலாக சிக்னல், டெலிகிராம் உள்ளிட்டவற்றை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இதனால் இதுவரை 2.5 கோடி பேர் மட்டுமே பயன்படுத்தி வந்த டெலிகிராம் செயலியை கடந்த 72 மணி நேரத்தில் மேலும் 2.5 கோடி பேர் தரவிறக்கம் செய்து பயன்படுத்த தொடங்கியுள்ளனர். தங்களது புதிய கொள்கைகள் தனிநபர் தகவல்களை பகிராது என வாட்ஸப் விளக்கம் அளித்தும் பிற செயலிகளுக்கு மக்கள் வேகமாக தாவி வருவதால் விழி பிதுங்கி நிற்கிறதாம் வாட்ஸப் நிறுவனம்.