இந்தியாவில் கால் பதிக்கும் எலான் மஸ்க்! – பெங்களூரில் டெஸ்லா நிறுவனம்!

Tesla
Prasanth Karthick| Last Modified புதன், 13 ஜனவரி 2021 (15:03 IST)
உலக கோடீஸ்வரர்களில் முதலாவது ஆளாக சமீபத்தில் இடம்பெற்ற எலான் மஸ்க் இந்தியாவில் தனது நிறுவனத்தின் மூலம் கால்பதிக்கிறார்.

டெஸ்லா கார் நிறுவனம், ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி ஆராய்ச்சி மையம் என பல நிறுவனங்கள் மூலம் உலகின் நம்பர் 1 பணக்காரராக வலம் வருபவர் எலான் மஸ்க். நிஜ வாழ்வின் அயர்ன் மேன் என அழைக்கப்படும் இவரது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அழைத்து செல்வதற்கான திட்டங்களில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் முதன்முதலாக எலான் மஸ்க் தனது டெஸ்லா கார் நிறுவனம் மூலமாக இந்தியாவில் கால் பதிக்கிறார். மஸ்க்கின் டெஸ்லா கார் நிறுவனம் இந்தியாவிலேயே முதன்முறையாக பெங்களூரில் தனது தொழிற்சாலையை அமைக்க உள்ளது. எலான் மஸ்க்கின் நிறுவனம் இந்தியாவில் கால் பதிப்பது குறிப்பிடத்தகுந்த முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என தொழில்துறை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :