சாட்டிங் தகவலை பேஸ்புக்கிற்கு தரவில்லை! – சர்ச்சைக்கு வாட்ஸப் விளக்கம்!
வாஸ்ட் அப் செயலி தனது பயனாளர்கள் தகவல்களை பேஸ்புக் நிறுவனத்துடன் பகிர உள்ளதாக வெளியான தகவல் குறித்து வாட்ஸப் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
இந்தியா முழுவதும் வாட்ஸப் செயலி தகவல் பரிமாற்றத்திற்கு அதிகமாக பயன்படுத்தப்படும் நிலையில் பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்கள், பரிவர்த்தனை விவரங்கள் உள்ளிட்ட பலவற்றை கண்காணிக்கும் வகையில் வாட்ஸ் அப்பில் புதிய நிபந்தனைகள் அறிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை ஏற்றுக்கொள்ளாவிட்டால் வாட்ஸப்பை பயன்படுத்த முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய கொள்கைகள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து வாட்ஸப் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அதில் “தனிநபர், குடும்ப சாட்டிங் டேட்டாக்கள் எதுவும் சர்வரில் சேமிக்கப்படாது. வழக்கம் போல அவை எண்ட் டூ எண்ட் தகவல் பரிமாற்றங்களாகவே இருக்கும். புதிய நிபந்தனைகள் மற்றும் கொள்கைகளால் பயனாளர்களின் தனிப்பட்ட எந்த விசயத்திற்கும் பாதிப்பு ஏற்படாது” என கூறியுள்ளது.